Saturday, February 23, 2019

அரசு மருத்துவமனையின் அலட்சியம் [தனி] யாருக்கு லாபம்!!!!!அரசு மருத்துவமனையின் அலட்சியம்

 [தனி]  யாருக்கு லாபம்!!!!!எவ்வாறு இப்படி ஒரு தவறு நிகழும்?

தவறு என்பது மனிதர்கள் அடிக்கடி எதிர்நோக்கும் ஒரு காரியமே
ஆனால் அது நிகழும் இடத்தை பொறுத்து அதன் தாக்கம் வெளிப்படும் பல நேரங்களில் நாம் தவறுகளை மன்னித்தும்
அல்லது மறந்தும் விடுகிறோம்.

ஆனால் நாம் மறந்தாலும் அதனால் ஏற்ப்பட்ட வடு அதை சார்ந்தவர்களுக்கே தினம் தினம் வலியை ஏற்படுத்தும்.


ஒருவருக்கு ரத்தம் ஏற்றபடும் பொழுது அதை பரிசோதித்து தான்
பயன்படுத்த வேண்டும் என எல்லோருக்கும் அடிப்படையாகவே
தெரிந்திருக்கும் ஆனால் இங்கு கதை வேறுக உள்ளது.

இங்கு தவறு தெரியாமல் செய்யவில்லை தவறு தெரிந்தே நடை
பெற்று உள்ளது என்பது எங்களின் கருத்து.

என்ன காரணம் அந்த கருப்பு பக்கத்தை புரட்டி பார்த்தால் உண்மை
புலப்படும்!!!!!!!!!


அரசு மருத்துவமனைக்கு வரும் கூட்டம்:


என்னதான் உயர்வான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில்
அளித்தாலும் மக்கள் அதிக அளவில் அரசு மருத்துவமனைக்கே 
கூட்டம் கூட்டமாக வருகின்றனர் என்பதே உண்மை.

அது மட்டும் அல்ல இன்றயை நிலைக்கு அரசு மருத்துவமனையில்
மருத்துவம் தரமாகவே உள்ளது, அரசு மருத்துவமனையில் கர்பிணி பெண்களுக்கு அதிக அளவில் சலுககைகள் வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் ருபாய் 80000/- வரை மகப்பேறு செலவு
ஆகிறது அதுவும் அறுவைசிகிச்சை இல்லாமல் சுக பிரசவத்துக்கே.

இதில் உயிர் பலி மிகவும் குறைவு என்பது மற்றொரு உண்மை.

இப்படி இருக்கும் போது தவறாக எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் உள்ள ரத்ததை எவ்வாறு செலுத்தி இருப்பார்கள், இவர்கள் யார் முளையாக செயல் படுகின்றனர்.


கார்ப்ரேட் அரசியல்:


உலகிலே இந்திய அரசை போல எங்கும் அதிக அளவில் மக்களுக்கு
இலவசங்களும் மற்றும் இலவச மருத்துவத்தையும் தர முடிவதில்லை.

சில புல்லுருவிகள் தங்களின் விசுவாசத்தை காரப்ரேட்களிடம்
அடகு வைப்பதினால் பல அடிதட்டு மக்கள் தங்களின் வாழ்வாதரத்தை பலி கொடுத்துவிடுகின்றனர்,

அமைச்சர் என்பவர் தன்னுடைய அரசுக்கு மட்டுமே உறுதுனையாக
செயல்படவேண்டும் அதை விடுத்து தனியார் துறைக்கு சோடை போவது தவறான தர்மம்.

பாதிக்கபட்டவர் கேட்டால் அவர்கள் விரும்பிய மருத்துவமனையில்
அது தனியாரக இருந்தாலும் சரி நாங்கள் அவர்களுடைய மருத்துவ செலவை எற்று கொள்கிறோம் என கூறுவது கோழைத்தனமான ஒரு
செயல்.

இந்த ஒரு வார்த்தை மக்களின் மனதை எவ்வாறாக மாற்றும் என அவர் சற்று சிந்தித்து பேசிருக்க வேண்டும்.

இதை பார்க்கும் போது தான் கார்ப்ரேட் அரசியல் புரிய வருகிறது.


தீர்வு  என்ன  ?


                      " தவறு செய்தவர்களை தண்டிப்பது நீதி அல்ல

                   முறையான தீர்வை அளிப்பதே சரியான நீதி ஆகும் "


என்றைக்கு அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் தங்களுக்கு மருத்துவம் பார்த்து வீடு திரும்புகிறார்களோ அன்றைக்கே தமிழக மருத்துவம் பெயர் அளவில் இல்லாமல் முழு அளவில் அரசு மேம்படுத்தபட்ட மருத்துவமனை என்ற நம்பிக்கையை மக்களிடம் பெறும்.

Monday, February 18, 2019

TRUTH of Pulwama attack புல்வாமா தாக்குதலின் பின்னனி


                                                       

             புல்வாமா தாக்குதலின் பின்னனி


யாருடைய தவறு ?
                                          இறந்த நாற்பது வீரார்களும் தங்கள் மரணத்தை

எண்ணி வருத்தம் கொள்வர், போரிலே வீராமாய் மாண்டிருப்போம் 

அற்ப துரோகத்தில் காலனின் காலிலே வீழ்ந்துவிட்டோம் என்று.நாம் எந்த நேரத்தில் என்ன செய்வோம் என்று நம்மை விட நம் 

எதிரிகள் நன்கு தெரிந்துள்ளனர், புல்லுருவிகளின் கூட்டம் 

நம்மிடையே அதிகரித்துள்ளது என்பதே என் கருத்து எங்கோ  

ஒளிந்து  கொண்டு நம்மை வேட்டையாடும் அளவுக்கு நம் 

எதிரிகளின் பலம் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு துறையின் மேம்போக்கு தனமே இதற்க்கு காரணம் 350

கிலோ எடையுள்ள வெடி பொருள் மற்றும் அதை ஏற்றி கொள்ள தனி

வாகனம் என பல காரணிகளை திவரவாதிகள் கையாளும் போது

அதை கண்காணித்து தடுக்க ஏன் பாதுகாப்பு துறையினரால்

முடியவில்லை.

புல்லுருவிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு நம் 

கண்கள் மூடப்பட்டுள்ளதா என நம்மை நாமே நொந்து கொள்ள 

வேண்டிய தருணம் இது.மக்களின் கண்மூடித்தனமான கோபம் : 

பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்கள் மீதான மக்களின் பார்வையில்

மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கடமை இந்திய அரசுக்கும்

மற்றும் பாகிஸ்தான் அரசுக்கும் மட்டுமே உள்ளது.

உண்மை என்னவென்றால் பாகிஸ்தான் நிலபரப்பில் 

திவிரவாதிகளின் பல இன்னல்களுக்கு அந் நாட்டின் மக்களே பெரும்

அவதிக்குள்ளாகிறார்கள்.

சிந்தியுங்கள் ! காலை எழுந்தது முதல் மாலை வீடு திரும்பும் வரை

பாதுகாப்பாக நம் உற்றோர் உறவினர் வந்து சேர்வார்களா என்ற 

பய உணர்வு அந்த மக்களுக்கே தெரியும்.

போர் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் ஆனால்

அது நிரந்தர தீர்வை என்றைக்கும் அளிக்காது என்பதை நாம் 

உணரவேண்டும்.
பன்னாட்டு அரசியலின் திவிரவாதம்:


அரசியல் கலத்தில் தங்களின் முத்திரையை பதிக்க விரும்புவோர்

திவிரவாத ஒடுக்கு முறை என்ற ஆயுததை கையில் எடுக்கின்றனர் 

இதனால் அவர்களை சார்ந்த மக்களிடையே பல நம்பிக்கையை 

மனதில் விதைக்கின்றனர்.

நாம் நாட்டுக்கு நேர்ந்த கொடுமைக்காக அந் நாட்டினர்களை பழி 

வாங்குவோம் என்றும் அவர்களின் மதத்தை பழிப்போம் என்றும்

தங்களின் மன எண்ணத்தை வெளிபடுத்துவது தவறான எண்ணம்.

திவிரவாதத்தை ஒடுக்க சிறந்த வழிகளுக்கான காரணிகளை தேட

வேண்டும்.

அதனை கல்வி, வேலை மற்றும் அக்கரை என்ற செயல்கள் மட்டுமே

செம்மைபடுத்தும் என்பதே பலரின் எண்ணம்.

பன்னாட்டு அரசியலுக்காக ஒரு நாட்டின் மக்களின் 

வாழ்வாதரத்தை கேள்வி குறியாக்குவது இறக்கமற்ற செயல்

உணவு, உடை, உறைவிடம் இது மூன்று மட்டுமே மக்களின் மனதில்

மாற்றத்தை உருவாக்கும், அந் நாட்டிற்க்கு பணம் அளிப்பதோ படை 

பலம் பெருக்க உதவுவதோ நல்ல செயல் அல்ல.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் முலம் அந் நாட்டின்

நாணய மதிப்பு உயரலாம் ஆனால் மக்களின் மன எண்ணத்தை 

மாற்ற முடியாது, பகைமையை மறக்க படயை பெருக்க மக்களின் 

நன்மதிப்பை பெற வேண்டும்.

குரல் கொடுப்போம் சகோதர நாடான பாகிஸ்தனை கருவருக்கும்

திவிரவாத அமைப்புகளுக்கு எதிராக.!!!!!!!!!!!


தி

Monday, November 26, 2018

THE NEW AGE OF MAFIAS


 பிழைக்க வழி தேடுபவர்களை வைத்து
                     பிழைத்து உண்னும் கூட்டம்.

      

வேலை வாங்கிதரும் நிறுவனங்கள் :

தன் பட்டபடிப்பை முடித்து விட்டு பல கனவுகளுடன் வெளிவரும் மாணவர்கள் அதிகம்பேர் இந்த வேலை தேடி தரும் நிறுவனங்களிடையே ஏமார்ந்து போய் விடுகின்றனர்.

ஒரு மாணவன் தன் கல்லுரி படிப்பை முடித்தவுடன் பல இடங்களில் தன் பணிக்காக அலைகின்றான், அப்படி வேலை தேடும் கூட்டத்தை குறிவைக்கிறது இந்த கும்பல்.

முதலில் சிறிய தொகையை செலுத்தினால் பெரிய நிறுவனத்தில் பணி வாங்கிதருவதாக கட்டணம் வசுலிக்கபடுகிறது, அவர்களும் அந்த மாணவர்களை இங்கு செல்லவும் அங்கு செல்லவும் என அலைக்கழிக்கின்றனர்.
காலப்போக்கில் அந்த வேலை தேடும் நபர் சலித்து போய் விட்டுவிடுவார், இந்த மனப்பக்குவத்தை மிக அருமையாக இந்த பண்னாட்டு நிறுவனங்கள் கையாளுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்யும் தவறு பெரிதாக எங்கும் பதிவு செய்யபடுவதில்லை முக்கியம் என்னவென்றால் இந்த செயலை யாரும் பெரிய குற்றமாக பார்ப்பதில்லை.

ஆனால் தினம்தோறும் பல இளைஞர்கள் இதனால் பதிக்கபடுகின்றனர் பல லட்ச ருபாய்கள் ஏமாற்றப்படுகின்றன ஆயிரம் ஆயிரம் ஆசை வார்த்தைகள் சொல்லப்பட்டு கோடிகளில் புரளும் நிறுவனங்களை அடையாளம் காட்டி அவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்.

இந்த சிறிய தொகுப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சிறிய இதயங்களில் பெரிய உண்மையை கொண்டு சேர்க்கும்.


   
                             நன்றி

Thursday, November 22, 2018

BLACK PAGE OF BAD MIND SET OF TAMILNADU PEOPLE.


    அரசாங்கத்தின் அலட்ச்சியம் (விளைவு) மக்கள் அலட்ச்சியம்

சிலைத்திருட்டு:

சமீபத்தில் ஒரு பயணம் மேற்கொண்ட போது திருக்கோவிலுர் மற்றும் திருவண்ணாமலைக்கு இடையில் இளைப்பாற நிற்க்கும் போது இந்த கால சுவடு கண்னில்பட்டது, இதன் காலம் கிபி 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம்.

ஏனெனில் அதில் பொரிக்கபட்ட எழுத்துகள் மற்றும் சின்னம் அக்கால கட்டத்துக்குறியது மற்றும் அதை எல்லை காவல் தெய்வமாக இன்றைய மக்கள் வழிபட்டுள்ளனர் அதற்கு ஆதாரமாக அங்கு ஒரு விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பழங்கால நிழற்மண்டபங்கள் தனியார் வசம் உள்ளது இதை கண்டும் காணமல் அங்குள்ள மக்கள் செல்கின்றனர் இதை தமிழக அரசும் பொருட்படுத்தவில்லை.

இந்த அலட்ச்சியமும், அர்ப்பதனமும் தான் இன்று பெரிய அளவில் சிலைதிருட்டுக்கு ஏதுவாக உள்ளது, நம் மக்களிடையே சரியான விழிப்புணர்வை இந்த அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசும் சரிவர மக்கள் மனதில் கொண்டு சேர்க்கவில்லை என்று உரக்க பறைசாற்றியே ஆக வேண்டும்.
தமிழகத்தில் இது போன்ற காலப்பொக்கிசத்தை சிதைவுகுள்ளாக்கிய கயவர்களை மற்றும் அதற்கு துனை நின்ற அதிகாரிகளை தண்டனைகுள்ளாக்க வேண்டும் ஏன்பதே என் கருத்து.

சிலைதிருட்டு நடக்கும் விதம்: (நான் விசாரித்தவரையில்)*


  இன்றயை காலகட்டத்தில் நவீன தொலைதொடர்பு வசதி இந்த சிலைதிருட்டில் முக்கிய பங்குவகிக்கின்றது, ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து சிலையின் புகைப்படம் மற்றும் அப்பகுதியின் அட்ச்சரேகை மற்றும் திர்க்கரேகை குறுஞ்செய்தி மூலமாக தரப்படுகிறது அதைகொண்டு அந்த மர்ம நபர்கள் அந்த பகுதியை சல்லடை போட்டு அந்த சிலையை கண்டுபிடிக்கின்றனர்,


பின்பு மீண்டும் அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பபடுகிறது, இப்பொழுது ஒரு முகவர் உங்களை தொடர்பு கொண்டு பொருளை கொரியர் மூலம் கைமாற்ற ஏற்ப்பாடு செய்வார் பின்பு இது கப்பல் போக்குவரத்தின் மூலம் வெளிநாடுகளுக்க்கு கொண்டு செல்லப்படுகிறது,

இந்த கொள்ளை சம்பவங்களில் திருட்டில் இடுபடும் நடுத்தர வயது இளைஞர்கள் தங்கள் வாழ்வின் விறு விறுப்புகாக மட்டுமல்லாமல் தன் பிழைப்பு தொழிலாகவும் இதனை மாற்றி கொள்கின்றனர்.

சிலை திருடும் நபர் அதை கடினப்பட்டு காயப்பட்டுலாம் திருடுவதில்லை மிக எளிதாக சிலயை திருடாமல் கொண்டுசெல்கின்றனர் இதற்க்கு காரணம் மக்களின் அலட்ச்சியப்போக்குதான், நம்மிடம் இருக்கும் கால வைரங்களின் மதிப்பு தெரியாமல் அதை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு
இல்லாமையும் தான் காரணம் மற்றும் இந்த குற்றங்களை மக்கள் பெரிதளவு கண்டுகொள்வதில்லை என்பது என் கருத்து.


                             நன்றி

   எழுத்து பிழையோ அல்லது கருத்து பிழையோ இருப்பின் அதை
 நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என உரக்க கூறி பிழையை
                       தெளிவுபடுத்தவும்.


                                                         இப்படிக்கு   
                                                       ர.அருண்குமார்
                                                          9176169963


அரசு மருத்துவமனையின் அலட்சியம் [தனி] யாருக்கு லாபம்!!!!!

அரசு மருத்துவமனையின் அலட்சியம்  [தனி]  யாருக்கு லாபம்!!!!! எவ்வாறு இப்படி ஒரு தவறு நிகழும் ? தவறு என்பது மனிதர்கள் அடி...